மற்ற ஹீரோக்களின் காலைப் பிடித்து இழுத்து விட்டு தன் மகனை முன்னுக்கு வரச் செய்த SAC; பகீர் கிளப்பிய பிரபலம்

Author: Sudha
20 July 2024, 11:48 am

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ் ஏ சந்திரசேகர். நடிகர் விஜயின் அப்பாவான இவர் விஜய்யை திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.இவரைப் பற்றி சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் ஒரு பிரபலம்.

அவர் குறிப்பிடும் பொது விஜய் ஹீரோவாக நடிக்க வந்த சமயத்தில் அவரை முன்னணி ஹீரோ ஆக்குவதில் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மிகவும் முனைப்புடன் இருந்தார். அதற்காக அவர் பின்பற்றிய ஒரு பாணி மற்ற நடிகர்களுக்கு பிரச்சினையாக அமைந்தது.

விஜய்க்கு போட்டியாக ஏதேனும் ஒரு நடிகர் வந்துவிடுவார் என நினைத்தால் உடனே அந்த நடிகரை அழைத்து அவருக்காக ஒரு திரைப்படம் இயக்கப்போவதாக சொல்வார்.இந்த விஷயம் தெரிந்த நிறைய நடிகர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஒரு சில நடிகர்கள் இதை நம்பி ஓகே சொன்னால் அந்த படம் வெளிவரும்போது அவருடைய வாழ்க்கையில் படு தோல்வியை சந்திக்கும் படமாக அமைந்துவிடும். அது இயற்கையாக நடக்கிறதா என்பது தெரியாது.

அவ்வாறே ஏதேனும் ஒரு நடிகர் பார்ப்பதற்கு நல்ல அழகாக இருக்கிறார் என்றால் அவருடைய படம் ஓடும் தியேட்டர்களில் ஒரு 50 பேர் கொண்ட குழுவினர் வருவார்கள் அவர்கள் தியேட்டரில் வந்து கூச்சலிட்டு சத்தம் எழுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டு அங்கே இருக்கும் பெண்களை முகம் சுழிக்க வைப்பார்கள் பிறகு அந்த தியேட்டருக்கு படம் பார்க்க செல்லும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும் மொத்தத்தில் தன்னுடைய மகனை எப்படியாவது திரையுலகில் முன்னுக்கு கொண்டு வர எல்லாவற்றையும் செய்தார் எஸ் ஏ சந்திரசேகர் என வலை அந்தணன் பகிர்ந்துள்ளார். அழகான நடிகர் எனும் போது அவர் நடிகர் அஜித்தை தான் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது பிரபலமாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 171

    0

    0