காலா, வலிமை என சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி தனது காதலருடன் பிரேக்கப் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோனாக்ஷி சின்ஹாவுடன் இணைந்து ஹூமா குரேஷி நடித்துள்ள டபுள் எக்ஸ் எல் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
மகத் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்காக நடிகர் சிம்பு முதன் முதலாக இந்தி பாடல் ஒன்றையும் பாடி உள்ளார். சமீபத்தில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த இந்தி பாடலை வெளியிட்டு இருந்தார் நடிகர் சிம்பு.
ஹூமா குரேஷி இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக அறிமுகமானவர் ஹூமா குரேஷி. ஷார்ட்ஸ், டி டே, பத்லாபூர், ஹை வே, ஒயிட், பெல் பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஆலியா பட் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கங்குபாய் கத்தியாவடி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். காலா காதலி இந்தி, மராத்தி, ஆங்கில மொழிகளில் படங்களில் நடித்து வந்த ஹூமா குரேஷி கடந்த 2018ம் ஆண்டு பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
காலாவின் முன்னாள் காதலியாகவும் நெகட்டிவ் ஷேட் உடனும் நடித்து அசத்தி இருப்பார் ஹூமா குரேஷி. அஜித்துடன் இணைந்து காலா படத்திற்கு பிறகு இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் இணைந்து ஆக்ஷனில் அசத்தி இருந்தார் ஹூமா குரேஷி. காலா படத்திலாவது இவருக்கும் ரஜினிக்கும் ஒரு பாடல் இருந்திருக்கும். ஆனால், வலிமை படத்தில் எந்தவொரு பாடல் காட்சியும் இல்லாதது ரசிகர்களை சற்றே ஏமாற்றியது.
ஹூமா குரேஷி, சோனாக்ஷி சின்ஹா, மகத் நடிப்பில் உருவாகி உள்ள டபுள் எக்ஸ் எல் திரைப்படம் வரும் நவம்பர் 4ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், ஹூமா குரேஷியும் அவரது நீண்ட நாள் காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
டபுள் எக்ஸ் எல் படத்தின் திரைக்கதை ஆசிரியரான முதாஸர் அசீஸ் தான் ஹூமா குரேஷியின் அந்த ரொமான்டிக் காதலர். கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் உருகி காதலித்து வந்த நிலையில், காதலரின் பேச்சைக் கேட்டே தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து இந்த படத்தையும் தயாரித்துள்ளார் ஹூமா குரேஷி.
ஆனால், என்ன மனகசப்பு ஏற்பட்டதோ தெரியவில்லை இருவரும் படம் வெளியாகும் முன்பே பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒருவேளை படத்தின் புரமோஷனுக்கான நம்பியார் காலத்து டெக்னிக்கா என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.