வசூலில் சாதனை மேல் சாதனை படைக்கும் வலிமை.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..?

Author: Rajesh
6 March 2022, 2:07 pm

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்   தயாரித்துள்ளார்.  அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். 

மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். 

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் குடும்ப ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வலிமை படம் 10 நாட்களில் ரூ 110 கோடிகள் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளாதாம். மேலும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1361

    1

    0