அஜித் ரசிகர்களை விடாத ப்ளூ சட்டை மாறன்… பால் பாக்கெட்டுகளை திருடும் கும்பல் என விமர்சனம்..!

Author: Rajesh
2 March 2022, 9:24 pm

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித்  நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்   தயாரித்துள்ளார்.  அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.  வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். 

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதனிடையே ப்ளூ சட்டை மாறன் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கொடுத்தார்.மேலும், அஜித்தை உருவ கேலியும் செய்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. இணையத்தில் அவரை தாக்கி பதிவிட்டு வருகின்றனர். சில பிரபலங்களும் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தனக்கு வந்த எதிர்விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்டுவிட் செய்து வருகின்றார். ‘பால் பாக்கெட்களை மட்டுமல்ல. குடிநீர் கேனையும் திருடி சாலையில் கொட்டி அராஜகம் செய்யும் கூட்டம். இவர்களை கண்டிக்க வக்கில்லாத சுண்டைக்காய் செலப்ரிட்டிகள்’ பதிவி செய்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?