14 நிமிட காட்சிகள் நீக்கம்… வலிமை படத்திற்கு வலிமை சேர்க்குமா.?
Author: Rajesh25 February 2022, 6:50 pm
இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியானதிலிருந்து படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. படத்திற்கான உழைப்பு படத்தில் தெரிந்தாலும் படம் நினைத்தது போல் வரவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
படத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரசிகர்கள் எப்படி எதிர் பார்த்தார்களோ அதேபோலத்தான் படக்குழுவும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நினைத்து எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் படம் கொஞ்சம் கூட ரசிகர்கள் மனதை கவராமல் போய்விட்டதாகவே கூறப்படுகிறது.
இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. செண்டிமெண்ட் காட்சிகள் தான் படத்தில் மிகப்பெரிய பின்னடைவு எனக் கருதி படத்தினை சுவாரசியப்படுத்துவதற்காக வேலையை படக்குழு செய்துள்ளது.
படத்திலிருந்து 14 நிமிடம் வரக்கூடிய பல காட்சிகளை நீக்கி இருக்கின்றனர். இந்த கட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன் வலிமை திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது படத்திற்கு வலிமை சேர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.