நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார்.
ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை உலகளவில் வலிமை திரைப்படம் ரூ. 150 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரமும் பெரிய படங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், வலிமையின் வசூல் வேட்டை இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,