ப்பா.. என்ன மனுசன்யா அஜித்.. வலிமை வரவேற்பு குறித்து வேற லெவல் பேச்சு…

Author: Rajesh
25 February 2022, 12:05 pm

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வலிமை படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் வெளியான திரையரங்குகளில் அஜித் ரசிகர்கள் இன்று வரை அதகளப்படுத்தி வருகின்றனர். அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமென்ட் நிறைந்த அதிரடி ஆக்ஷன் படமாக வெளியானது. ஹூமா குரேஷி உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சனையால் சில மாதங்களாக தவித்த வந்த திரையரங்கு உரிமையாளர்களுக்கு வலிமை படம் நம்பிக்கையை விதைத்துள்ளது என்றே கூறாலாம். அந்த வகையில் பெரும்பாலான திரையரங்குகளில் வரும் ஞாயிறு வரை செம டிக்கெட புக்கிங் ஆகியுள்ளது.

இதனிடையே இந்த படத்திற்கு கிடைத்துள்ள முன் வரவேற்பு குறித்து நடிகர் அஜித்திடம் இயக்குனர் பேசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வலிமை படத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது நிரந்தரமில்லை என்றும் இதுவும் கடந்து போகும் எனவும் வினோத்திடம்; அஜித் கூறியிருக்கிறார்.

மேலும், நம்மை சுற்றி நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி எதுவுமே நிரந்தரமில்லை என நினைத்துக்கொண்டாலே வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழக்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் எந்த பிரச்சனையையும் ஈஸியாக கடக்கலாம். வெற்றி, தோல்வி எப்போதும் வாழ்வில் ஒன்றாக்கத்தான் இருக்கனும் என்று வினோத்திடம் கூறி இருக்கிறாராம் அஜித். இதனை கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டுதான் போய் உள்ளார் வினோத்..

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1695

    8

    0