நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமான வலிமை, கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகியது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு பிறகு, திரையரங்கில் வெளியான மிகப்பெரிய படம் வலிமையாகும்.
உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு முதல் நாளிலிருந்தே அமோக வரவேற்பு கிடைத்தது. சுமார் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்து வருகிறது வலிமை. இப்படியிருக்கையில், வலிமை திரைப்படம் வரும் 25ம் தேதி ZEE5 ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
இதனை விளம்பரப்படுத்தும் விதமாக ZEE5 நிறுவனம் பிரமாண்ட யுக்தியை கையில் எடுத்துள்ளது. அதாவது, சுமார் 10 ஆயிரம் சதுர அடிக்கு வலிமைப் படத்தின் போஸ்டரை செய்து மலைக்கச் செய்துள்ளது.
இதனை 72 மணி நேரத்தில் 500 தன்னார்வலர்களின் உதவியுடன் செய்து முடித்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வலிமை கொண்டாட்டத்தில் இருந்து வெளியே வராத அஜித்தின் ரசிகர்களுக்கு இது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு, ZEE5 நிறுவனத்தை AK ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.