தமிழ் சினிமாவின் விசித்திர படைப்பாளியான இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் வெளிவருகிறது என்றாலே அது எந்த ஒரு இயக்குனரும் யோசிக்காத வகையில் வித்தியாசமான கதை கண்ணோட்டத்தில் படத்தை இயக்கி வெற்றி பெறச் செய்வார். இதுதான் பாலாவுக்கு இருக்கும் தனி சிறப்பே என்றே சொல்லலாம்.
அந்த வகையில் தற்போது அருண் விஜய் வைத்து “வணங்கான்” என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ் ,மிஸ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்.
பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்த படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதள பக்கத்தில், “பாலா இயக்கிய “வணங்கான்” படத்தை பார்த்து நெகிழ்ச்சியாக இருக்கிறேன்.
வாயடைத்து போய்விட்டேன். அருண் விஜயின் நடிப்பு அபாரத்தனமாக இருக்கிறது. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்! பாலா மீண்டும் ஒருமுறை தன்னை யார் என்று நிரூபித்து விட்டார். லவ் யூ பாலா அண்ணா என்று நிகழ்ச்சியோடு குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.