அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. அந்த ஆசை குறித்து வெளிப்படையாக பேசிய வாணி போஜன்..!
Author: Vignesh12 February 2024, 11:26 am
சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதனிடையே, நடிகர் விஜய் புது அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த பிறகு தமிழ்நாட்டில் அரசியல் வட்டாரத்தில் அவரைப்பற்றி பேச்சு தான் சமீப காலமாக இருந்து வருகிறது. விஜய் முதலமைச்சர் ஆவாரா என்று தான் பல பிரபலங்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அந்த வகையில், நடிகை வாணி போஜன் ஒரு நிகழ்ச்சியில், செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கையில், விஜய் அரசியலில் நுழைந்து இருப்பது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும், என்ன செய்ய போகிறார் என்று பார்க்கலாம். இதுதான் என்னுடைய ஆசை என வெளிப்படையாக வாணி போஜன் தெரிவித்துள்ளார்.