பணம் முக்கியமில்ல.. அதுதான் வேணும்.. படுக்கைக்கு அழைத்தது குறித்து வாணி போஜன் ஓபன் டாக்..!

Author: Vignesh
28 October 2023, 12:20 pm

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

vani bhojan-updatenews360

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். அதன் பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

vani bhojan-updatenews360

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக தான் சந்தித்த மோசமான அனுபவத்தை குறித்து பேசினார். தேவை இருக்கிறதோ இல்லையோ வேண்டுமென்றே படுக்கையறை காட்சிகளை வைக்கிறார்கள். உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.

vani bhojan-updatenews360

அப்போது, என்னிடம் எதுவும் கூறாமல் படப்பிடிப்பில் படுக்கை அறை காட்சி இருக்கிறது என்று கூறினார்கள். நான் யோசித்து கதைக்கும் இந்த காட்சிக்கும் சம்பந்தமே கிடையாது, அது இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக இருக்கும் வம்படியாக ஏன் மசாலாவை சேர்க்குறீங்க என்று தயாரிப்பு நிறுவனத்திடமே கேட்டதால் அந்த காட்சி இல்லாமல் படபிடிப்பு நடந்ததாகவும், பணம் முக்கியமில்ல.. கேரக்டர் தான் வேணும், என நடிகை வாணி போஜன் தெரிவித்திருக்கிறார்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 1211

    28

    14