என்ன வேண்டவே வேண்டாம்னு ஒதுக்குனாங்க.. சமயம் பார்த்து பதிலடி கொடுத்த வாணி போஜன்..!
Author: Vignesh19 July 2023, 4:30 pm
எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் நம்ம வாணி போஜன்.
முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

முன்னதாக, வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் இவர் லவ் படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தின் ப்ரோமோஷன் பேட்டி கொடுத்திருந்தார். அதில், தான் மற்ற நடிகைகளை தன்னுடன் போட்டியாக நினைத்ததில்லை என்றும், டிவியில் இருந்து வந்த பிரியா பவானி சங்கரை தனக்கு போட்டியாக நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி தொடரிலிருந்து வந்ததால் முன்னணி ஹீரோக்கள் கூட தன்னுடன் நடிக்கவில்லை என்றும், படத்தில் இருந்து ஒப்பந்தம் ஆகும் முன்பே நிறைய வாய்ப்புகள் கைநழுவி போனதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்பு அவர்களின் படங்களில் தனக்கு வாய்ப்பு கிடைத்த போது வாய்ப்புகளை தான் தட்டிக் கழித்ததாகவும், தெரிவித்திருக்கிறார்.
மேலும், தன் நடிப்புக்கு மரியாதை தர மாட்டார்கள் என்று நினைத்ததால் ஏன் அதை ஏற்க வேண்டும் என்று எண்ணம் தனக்கு வந்ததாகவும் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும், இதே போல பல படத்தை தூக்கி எறிந்து இருப்பதாகவும் வாணி போஜன் தெரிவித்துள்ளார்.