யாரு கூட சேர்ந்து நடிச்சாலும் காதல், கசமுசானு போடுவீங்களா? கொந்தளித்த பிரபல நடிகை!!!

Author: Vignesh
31 March 2023, 11:40 am

நடிகை வாணி போஜன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

vani bhojan-updatenews360

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வாணி போஜன் பல விசயங்களை பார்த்து கோபப்பட்டு ரியாக்ஷன் செய்துள்ளார். ஒரு செய்தியில் வாணி போஜன் புகைப்படத்தோடு வேறொருவர்களின் புகைப்படத்தை சேர்ந்து பகிர்ந்திருக்கும் போட்டோவை பார்த்து தான் அது இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

vani bhojan-updatenews360

மேலும், தான் எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் காதல்ன்னு எழுதுராங்க, பெரிய ஹீரோவோடு எழுதுங்க என்று காமெடியாக தெரிவித்துள்ளார். அசோக் செல்வன் என் தம்பி மாதிரி, ஜெய்யுடன் காசிப்ஸ் வரும் போது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரு என்பது ரொம்ப சீப்பான விசயம், லோன் கட்டி வீடு கட்டி இருக்கேன் என்று ஆதங்கத்துடன் வாணி போஜன் தெரிவித்திருக்கிறார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 793

    1

    1