சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். அதன் பின்னர் பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக தான் சந்தித்த மோசமான அனுபவத்தை குறித்து பேசுகினார். நான் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துக்கொண்டேன். அப்போது எனக்கு பீரியட்ஸ் நேரம். முந்தின நாட்களில் நான் சரியாக தூங்கவில்லை. இதனால் என் உடல்நிலை மிகவும் சோர்வடைந்து முகமெல்லாம் வீக்கத்துடன் இருந்தது.
இதனை பார்த்து வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டுள்ளார். திடீரென அவரது முகத்திற்கு என்ன ஆயிற்று? என்றெல்லாம் செய்தி எழுதி வெளியிட்டுவிட்டார்கள். அது எனக்கு மிகுந்த வேதனை கொடுத்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாத மாதம் இதுபோன்ற பிரச்சனை இருக்கும். அவரவர் உடல்நிலை பொறுத்து அந்த நேரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும் எனக்கு அந்த சமயத்தில் முகமெல்லாம் சற்று பூசின மாதிரி இருக்கும் அதுக்காக அப்படியெல்லாம் வதந்தி பரப்பி விட்டுட்டாங்க என ஆதங்கப்பட்டார்.
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
This website uses cookies.