பிரபல இசையமைப்பாளருடன் படுக்கை அறை காட்சி… தெறித்து ஓடிய வாணி போஜன்!
Author: Vignesh7 April 2023, 6:30 pm
நடிகை வாணி போஜன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பேச்சுலர் படத்தில் ஹீரோயினாக திவ்ய பாரதி நடித்திருப்பார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
இந்நிலையில், பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக முதலில் நடிகை வாணி போஜன் தான் நடிக்கவிருந்ததாகவும், பேச்சுலர் படத்தில் படுக்கை அறை, நெருக்கமான காட்சிகள் அதிகமாக இருந்த காரணமாக தான் இப்படத்தில் நான் நடிக்கவில்லை என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தான் பேச்சுலர் படத்தில் நடித்திருந்தால் சில காட்சிகள் தனக்காக மாத்திருக்க வேண்டும் எனறும், இயக்குனர் எனக்காக காட்சிகள் நீக்க கூடாது என்பதால், படத்தை இயக்கும் போது இயக்குனருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என இப்படத்தில் நடிக்கவில்லை என்று வாணி போஜன் கூறியுள்ளார்.