“என்னங்க Short Haircut-லாம் பண்ணிட்டு, ஆளே மாறிட்டீங்க..” வாணி போஜன் Hot Photos!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2022, 11:57 am

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது. ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார். அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில், தன்னுடைய Short Haircut-லாம் செஞ்சு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.”என்னங்க Short Haircut-லாம் பண்ணிட்டு, ஆளே மாறிட்டீங்க..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?