இவன் ஒரு பெரிய ஏழரை.. பிக்பாஸ் போட்டியாளரை வறுத்தெடுத்த வனிதா..!
Author: Vignesh4 October 2023, 4:38 pm
இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இதனிடையே, பிக் பாஸ் போட்டியார் கூல் சுரேஷ் குறித்து வனிதா வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஏழரையை கொண்டு வருவார்கள். இந்த முறை கூல் சுரேஷ் என்னும் ஏழரையை அறிமுகம் செய்துள்ளனர். அவர் செய்வது எதார்த்தமாக செய்யவில்லை என்றும், தனக்கென்று ஒரு ஸ்டேட்டர்ஜியை வைத்து உள்ளார். இவரை பார்க்கும்போது ஜி பி முத்து ஞாபகம் வருகிறது. ஆனால், அவரை ஏழரை என்று கூற முடியாது அவர் ஒரு நல்ல மனிதர் என்று கூறலாம் என வனிதா தெரிவித்துள்ளார்.