கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கான மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் வனிதா விஜயகுமார். முன்னதாக இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவ்வளவாக மக்களுக்கு பரீச்சயமாகவில்லை. இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதற்கு முன்னர் தனது தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறில் வனிதா சண்டையிட்டதால் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். இதனால் அந்த குடும்பத்திலிருந்து வனிதா ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் தனது இரண்டு மகள்களுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார் . அவரது மகனான ஸ்ரீ ஹரி தனது தாத்தா விஜயகுமார் உடன் தான் வளர்ந்து வருகிறார் .
இந்நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். பிரபு சாலமோன் இயக்கத்தில் “மேம்பூ” என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் லாஞ்ச் அண்மையில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீஹரி தனது தாத்தாவுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஸ்ரீஹரி எந்த ஒரு இடத்திலும் வனிதாவை தனது தாயாக அங்கீகரித்துப் பேசவே இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாகியது.
இந்நிலையில் எந்த ஒரு தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என வனிதா மிகவும் வேதனையோடு வருத்தத்தோடு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், “என்னுடைய குழந்தை இன்று ஒரு ஹீரோவாக வளர்ந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். மீடியா நண்பர்கள் எல்லோரும் எனக்கு எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல் என்னுடைய மகனுக்கும் ஆதரவை கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அவருக்கு உரிய வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த பிரபு சாலமோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ரஜினிகாந்த் மாமாவின் வழிகாட்டுதலின்படி என்னுடைய மகன் திரையில் வெற்றி நடை போடுவார். என் மகன் திரையில் மிகப்பெரிய வெற்றியை காண தண்ணீர் மல்க சந்தோஷத்தோடு இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்ரீஹரி வனிதாவை விட்டு பிரிந்த சமயத்தில்….நான் வனிதா விஜயகுமாரின் மகன் அல்ல ஆகாஷின் மகன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வனிதா ஒரு தாயாக ஏக்கத்துடன் மகனைக் குறித்து பதிவிட்டு வாழ்த்தியுள்ளதை பலரும் பாராட்டி அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.