யாரை கேட்டு பையனோட போட்டோவ வச்சீங்க.. மகனின் புகைப்படம் குறித்து வனிதா திடீரென்று வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
25 October 2023, 5:06 pm

உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது.

சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எல்லா விமர்சனத்திலும் லியோ படத்திற்கான ரேட்டிங் கொஞ்சம் குறைவாகவே வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வசூல் வேட்டையில் படத்திற்கு எந்த குறைச்சலும் இல்லை.

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த வனிதா விஜயகுமாரின் மகன் லியோ படத்தில் இருக்கிறார் என்ற தகவல் புகைப்படத்துடன் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், நடிகர் விஜய் அர்ஜுனிடம் தான் லியோ இல்லை என்பதை நிரூபிக்க தன்னுடைய சில குடும்ப புகைப்படங்களை காண்பிப்பார்.

vanitha_updatenews360

அதில் தனது மகனின் முதல் பிறந்தநாளின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பிப்பார். அந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் வேறு யாருக்கும் கிடையாது பிரபல நடிகையான வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான ஸ்ரீஹரிதான்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசியபோது வனிதா அந்த புகைப்படத்தை பார்க்கும்போது உண்மையிலேயே மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. இதற்காக லோகேஷ்க்கும் விஜய்க்கும் என்னுடைய சமூக வலைதளத்தில் நன்றியை கூட தெரிவிச்சிட்டேன்.

இது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு நினைக்கிறேன். பொதுவா திரைப்படங்களில் இறந்து போனவர்களோட போட்டோ தான் காமிப்பாங்க அதுக்காக யாரும் யாரிடமும் போயிட்டு அனுமதி கேட்கணும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால், இந்த மாதிரி புகைப்படங்களை திரைப்படங்களில் பார்க்கும்போது ஒரு ஃபீல் கிடைக்கும். லியோ படத்துல விஜய் காண்பித்த ஃபோட்டோ ஸ்ரீஹரியோட பிறந்தநாள் அப்போது, எடுத்த போட்டோ அதுக்காக அவங்க அனுமதி வாங்கணும்னு நாம்ம கேட்க முடியுமா? அந்த படத்தை பார்த்ததும் எனக்கு சந்தோஷமா இருந்துச்சு என்று வனிதா தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 371

    1

    0