விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்… ? வனிதா பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

Author:
10 October 2024, 3:54 pm

நடிகையா வனிதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த மஞ்சுளா விஜயகுமாரின் மகள் ஆவார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதை அடுத்து திரைப்படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆன வனிதாவுக்கு திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இதனிடையே தனது மகள்களுடன் தனிமையில் வசித்து வந்தார்.

vanitha

இதற்கிடையில் தனது தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

ravindhar

அதன் பிறகு ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர் குடிபோதைக்கு அடிமையானவர் எனக்கூறி அவரையும் விவாகரத்து செய்தார்.

பின்னர் பீட்டர் பால் மரணம் அடைந்து விட்டார். வனிதா விஜயகுமாருக்கு விஜய் ஸ்ரீ ஹரி ,ஜோவிகா, ஜெயந்திக்கா என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் இரண்டு மகள்கள் அவருடன் தான் வளர்ந்து வருகிறார்கள்.

இப்படியாக இப்படியாக நடிகை வனிதாவின் தொடர் திருமணங்களும் அதன் விவாகரத்துகளும் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வந்தது. இதனிடையே அண்மையில் ராபர்ட் மாஸ்டருடன் நெருக்கமாக பீச்சில் முட்டி போட்டு அவருக்கு ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டு அக்டோபர் 5ம் தேதி என தேதியுடன் குறிப்பிட்டு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். பின்னர் அது புது படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பதாகவும் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அப்படி போஸ்ட் பதிவிட்டதாக செய்திகள் வெளியானது .

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்திய பெற்று ஒன்றில் கலந்து கொண்ட போது ரவீந்திரனுக்கு பிக் பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது நான் தான். அவர் எனக்கு கால் செய்து என்னை அழைத்து எனக்கு ரெக்கமண்டேஷன் கேட்டார். கடந்த இரண்டு வருடங்களாக அழைப்பு வந்தும் அவரால் போக முடியாமல் இருந்தது. இந்த டைமில் அவருக்கு போக வேண்டும் என ஆசை வர பின்னர் அவர் எனக்கு போன் செய்து என்னிடம் உதவி கேட்டார்.

இதையும் படியுங்கள்:

அதன் பிறகு நான் ரெபர் பண்ணி தான் அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறேன் எனக் கூறி பெருமை பேசி இருக்கிறார் நடிகை வனிதா. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் உருட்டு உருட்ட நீ இன்னும் என்னென்ன உருட்ட போறியோ தெரியலையே?…. விட்டால் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்னு உருட்டுவ போல என நெட்டிசன்ஸ் வனிதாவை பங்கமாக விமர்சித்து கலாய்த்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 238

    0

    0