என் வாழ்க்கையை சீரழிச்சதே அவர்தான்.. பகீர் குற்றச்சாட்டை கூறிய வனிதா..!

Author: Vignesh
24 February 2024, 5:21 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

vanitha_updatenews360

பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இதனிடையே வனிதா அப்பா விஜயகுமாருடன் சொத்து தகராறு செய்து அவரை நடுரோட்டில் இழுத்து அடித்து குடும்ப மானத்தையே வாங்கிவிட்டார். அன்றிலிருந்து அந்த குடும்பத்தில் இருந்தே வனிதாவை பிரித்துவிட்டார்கள். இதனால் பல வருடங்களாக தனது மகள்களுடன் தனித்து வாழ்ந்து வருகிறார் வனிதா.

இந்நிலையில், என்னுடைய அப்பா சமீபத்தில் ஒரு பேட்டியில் என்னுடைய மகள்கள் எப்படி என்று ஒவ்வொருவர் பேரையும் சொல்லி இருந்தார். என்னுடைய அப்பா என்னுடைய, பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என் பெயரை தவிர மிச்சமுள்ள எல்லோரின் பெயரையும் சொல்லி இருந்தார். அது எனக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது. நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால், உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், என்னுடைய அப்பா பேச்சைக் கேட்ட பிள்ளைகள் என்றால், அது நான் மட்டும் தான்.

vanitha - update news 360

அவரால் தான் என்னுடைய வாழ்க்கை சீரழிஞ்சு போச்சு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது சில வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட காணொளியாக இருந்தாலும், இப்போது விஜயகுமார் வீட்டில் நடந்த திருமணத்தில் வனிதாவை அவர்கள் அழைக்காமல் ஒதுக்கி வைத்திருந்த காரணத்தினால் இணையதளத்தில் இதனை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 198

    0

    0