அவர் ஆண்டவர் இல்லை.. கமலுக்கு பயம்… கோபத்தில் கொந்தளித்த வனிதா..!

Author: Vignesh
13 November 2023, 6:13 pm

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது விமர்சனத்தை வெளியிட்டு வரும் வனிதா விஜயகுமார் கடந்த வாரம் கமலின் நடவடிக்கை குறித்து பேட்டி ஒன்று பேசியுள்ளார். அதாவது, பிரதீப் விவகாரம் பெரும் விவாதங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவரை தேவையில்லாமல் வெளியேற்றி விட்டார்கள் என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் பங்குகளுக்கு கருத்துக்களை தெரிவித்து தொகுப்பாளரான கமலஹாசனை வறுத்தெடுத்து விமர்சித்து வருகிறார்கள்.

vanitha

வழக்கம்போல, இந்த வாரமும் நிகழ்ச்சி குறித்து வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அது குறித்து அவர் பேசுகையில், வெளியே போனவன் போனவன் தான் என பிரதிப் பற்றி கூறியும், இதை வச்சு ட்ராமா எல்லாம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும், சோசியல் மீடியாவில் வந்த கருத்துக்கள் வீட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடித்தது என்ற வனிதா இந்த பிரச்சனை குறித்து ஆண்டவர் பேசுவாரா மாட்டாரா என்று குழப்பம் இருந்தது என்றும், நல்லவேளையாக அவர் பேசினார் என சுட்டிக்காட்டி உள்ளார்.

பிரதீப் விவகாரத்தை கையாண்டதில் கமலுக்கு பயம் இருந்தது தெரிந்தது என குறிப்பிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்ப்பது வேறு போட்டியாளராக உள்ளிருந்து கவனிப்பது வேறு என்று தெரிவித்து, வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களால் அனைத்தையும் அப்படியே ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

pradeep-kamal-7

மேலும், சோசியல் மீடியா கொடுத்த அழுத்தம் கமல் சார் மீது கொடுக்கப்பட்ட விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட வனிதா அவர் ஆண்டவர் இல்லை அவரும் ஒரு சாதாரண மனிதர் தானே என்று தெரிவித்துள்ளார்.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!