என் பொண்ணுக்கு தமிழ் படிக்க தெரியாதா? கோபத்தின் உச்சத்தில் வனிதாவின் கணவர் அனுப்பிய வீடியோ!

Author: Shree
7 October 2023, 9:19 am

.

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

vanitha jovika - updatenews360

இதனிடையே, நேற்று வனிதாவின் மகள் ஜோதிகாவின் கல்வி குறித்து விசித்ரா விமர்சனம் செய்துகேலி செய்துள்ளார். ஒருகட்டத்தில் அதை பொறுத்துக்கொள்ளமுடியாத ஜோவிகா அனைவர் முன்னிலையில் விசித்ராவை வெளுவெளுன்னு வெளுத்துக்கட்டிவிட்டார். ஜோவிகாவின் நியாயமான கோபத்தை பார்த்த ஆடியன்ஸ் வனிதா ரத்தம்டா…. வாயாடி பெத்த புள்ளடா என அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விசித்ராவுக்கு பதிலடித்துள்ள வனிதா ” ஜோவிகா அழகாக தமிழ் படிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை ஜோவிகாவின் அப்பா வனிதாவின் கணவர் தான் இந்த சமயத்தில் அந்த வீடியோவை அனுப்பி அப்லோட் செய்ய சொன்னதாகவும் வனிதா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் “குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த கனவுகள் உள்ளன. அவற்றை நம்புங்கள் … பெற்றோர்களாகிய எங்களுக்கு எங்கள் குழந்தையை வழிகாட்ட தெரியும். எனவே உங்கள் தேவையற்ற ஆலோசனைகளை யாரும் கேட்கவில்லை என தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 677

    2

    2