நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. என்னால முடியும்.. உங்களுக்கென்ன? வனிதா அதிரடி!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2025, 10:42 am
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தது நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் விஜய் உடன் சந்திரலேகா படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து படங்களில் நடித்த அவருக்கு, தனிப்பட்ட வாழ்க்கை பெரும் சர்ச்சையானது. அடுத்தடுத்து திருமணம் செய்து விவாகரத்து செய்ததால் இவர் மீது சர்ச்சைகள் விழுந்தன.
தற்போது நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் Mrs & Mr வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இதன் ப்ரொமோஷனுக்காக வெளியிடப்பட்ட போஸ்டர் பேசுபொருளானது.
இதையும் படியுங்க: எல்லாமே போச்சு- சூர்யா வைத்து படம் எடுத்ததால் நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்?
தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் வனிதா, அலர்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது குறித்த பிரஸ்மீட் நேற்று நடந்தது. அதில் அலர்ட் படம் பெண்கள் செய்யும் தப்பை சுட்டிக்காட்டும் படமாக அமைந்துள்ளது.
பெண்களுக்கு நிறைய முன்னுரிமை உள்ளது. ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டியும், அவர்களுக்கும் தண்டனை உள்ளது போல படம் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் பேசிய அவர், நான் 4 கல்யாணம் கூட இன்னும் பண்ணல, 3 தான் பண்ணிருக்கேன். 40 கூட பண்ணுவேன், அதனால உங்களுக்கென்ன, எதுக்கு வயித்தெரிச்சல் என காட்டமாக பேசினார்.