கமல் பேசியே ஆகனும்.. விளக்கம் தரலனா கேஸ் போடுவேன்: வனிதா எச்சரிக்கை..!

Author: Vignesh
10 November 2023, 6:30 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

vanitha

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 லிருந்து கடந்த வாரம் பிரதீப் வெளியேற்றப்பட்டது. தொடர்பாக, நெட்டிசன்கள் மாயா மற்றும் பூர்ணிமா கேங்கை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, விஜய் டிவி மற்றும் கமலஹாசனையும் கண்டமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். ஜோவிகாவும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என பேசி இருந்தார் என்பதால் அவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா இந்த சர்ச்சை பற்றி பேசும்போது ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். அதாவது, ஜோவிகா அப்படி பேசவே இல்லை ரெட் கார்டு கொடுத்ததற்கான காரணம் பற்றி கமல்ஹாசன் இந்த வாரம் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையென்றால் நான் வழக்கு தொடர்வேன். ஜோதிகாவுக்கு 18 வயது ஆகிவிட்டது. அவள் வந்து வழக்கு தொடர்வாள் என வனிதா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 400

    0

    0