இதோட நிறுத்திகோங்க.. போதும் முடியல … பீட்டர் பால் மறைவு குறித்து வனிதா ஆவேசம்..!

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு பீட்டர் பாலின் முதல் மனவி எலிசபெத் எதிர்ப்பு தெரிவித்தார்.

பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் இந்த திருமணம் நடந்தது. சமூக வலைத்தளங்களில் இதை வைத்து தேவை இல்லாத விவாதங்கள் நடத்தப்பட்டது. நடிகை கஸ்தூரி போன்றவர்கள் இதில் கருத்துக்களை சொல்ல அது பெரிய சர்ச்சை ஆனது.
பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாகவும். திடீரென தன்னை ஏமாற்றிவிட்டு வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும். தோளுக்கு மேல் பையன் இருக்கும் நேரத்தில் இப்படி இவர்கள் திருமணம் செய்து கொண்டது தவறு என்றும் எலிசபெத் புகார் அளித்தார்.

வனிதா இந்த புகார்களை எல்லாம் மறுத்தார். அதோடு பீட்டர் பால் குடிக்க மாட்டார். அவர் குடிப்பதை நிறுத்திவிட்டார் என்று கூறினார். இதற்கு பதில் சொன்ன எலிசபெத்.. இப்போது குடிக்க மாட்டார். ஆனால் போக போக அவரின் சுய ரூபம் தெரியும் என்று கூறினார்.

அவர் சொன்னபடியே வனிதா பீட்டர் இடையில் மோதலும் வந்தது. வனிதா பீட்டர் இருவரும் கோவாவிற்கு ஹனி மூன் சென்ற போது அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கே பீட்டர் தினமும் குடித்துவிட்டு அலப்பறை செய்து இருக்கிறார்.

இதனால் இருவருக்கும் இடையில் மோதல் வந்துள்ளது. இந்த மோதல் உச்சம் எடுக்கவே.. பீட்டர் குடித்துவிட்டு வனிதாவிடம் மோசமாக நடந்து கொண்டு இருக்கிறார். அவரை மோசமாக திட்டி இருக்கிறார்.

இந்த சண்டை மோசமாகவே அவர்கள் இருவரும் அங்கேயே பிரிந்தனர். கோவா ஹோட்டலிலேயே பீட்டரை துரத்தி அடித்து உள்ளார் வனிதா.

இந்த நிலையில் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக இவருக்கு கல்லீரல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு அவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த வாரம் அவரின் உடல்நிலை மிக மோசமானது. இந்த நிலையில் பீட்டர் பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில், வனிதாவின் 3-ம் கணவர் பீட்டர் பால் குறித்து செய்திகள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியானது.

தற்போது இதுகுறித்து பேசிய வனிதா, “பீட்டர் பால் நானும் 2020-ம் ஆண்டு உறவில் இருந்தோம் ஆனால் நாங்கள் இருவருமே அதே ஆண்டில் பிரிந்துவிட்டோம் என்றும், அவர் தன்னுடைய கணவர் கிடையாது எனவும், தான் சிங்கிளா தான் இருக்கிறேன் எனவும், பீட்டர் பால் தன்னுடைய கணவர் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?

கயாடு லோஹர் ஒரே ஒரு படத்தால் படு பேமஸாகி வருகிறார். இவர் நடித்து அண்மையில் வெளியான டிராகன் படம் 100…

5 minutes ago

செத்துப்போனவங்களை ஏன் பாட வைக்கனும்?-ஆதங்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்!

ஹாரிஸ் மாமா 90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில்…

18 minutes ago

எனக்கு எதுக்கு ஆட்ட நாயகன் விருது? தோனி கைக்காட்டிய அந்த வீரர் யார் தெரியுமா?

ஐபிஎல் போட்டியில் நேற்று வெகு நாள் கழித்து சென்னை அணி வெற்றியை ருசிபார்த்தது. நேற்று சென்னை அணி லக்னோ அணியுடன்…

47 minutes ago

23 வருஷம் ஆகிடுச்சு, எப்படி மறக்கமுடியும்?- சிம்ரன் மனசுல இப்படி ஒரு துயரமா? அடப்பாவமே!

இடுப்பழகி சிம்ரன் 90ஸ் கிட்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். இந்த 49 வயதிலும் அவர் இளமையாகவே இருக்கிறார்.…

1 hour ago

கோட்டாட்சியருக்கு மிரட்டல்.. திமுக தூண்டுதல் பேரில் மிரட்டிய நபர் பாஜக பிரமுகரா?

திமுகவினர் தூண்டுதலில் பாஜக பற்றி தவறான தகவலை பரப்பி கோட்டாட்சியரை மிரட்டிய நபர் மீது மாநகர் காவல் ஆணையரிடம் புகார்…

1 hour ago

தனுஷை வைத்து படம் இயக்கிய பிரபலம் திடீர் மரணம்…. திரையுலகம் ஷாக்!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரை வைத்து ஆரம்ப காலக்கட்டத்தில் ஏராளமான படங்களை இயக்கினர்.…

2 hours ago

This website uses cookies.