ஜோவிகா மேல ரொம்ப கோவம் வருது.. கடுப்பான வனிதா விஜயகுமார்..!

Author: Vignesh
10 November 2023, 11:00 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

bigg boss 7 tamil-updatenews360

இதனிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 2 ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. பிரதீப் தரப்பு நியாயத்தை தெரிவிக்க கமல் ஏன் அனுமதிக்கவில்லை என்று பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

vanitha

இந்நிலையில், பிரதீப் ரெட் கார்ட் குறித்து வனிதா கூறுகையில், மக்களை தூண்டிவிடுவதற்காகவே பொய்யான ஒரு காரணம் சொல்லி பிரதீப் வெளியேற்றப்பட்டதாக விசித்ரா பேசுகிறார். விசித்ரா பக்காவாக பிளான் செய்துதான் கேமை விளையாடுகிறார். பிரதீப் வெளியேற்றப்பட்ட போது விசித்ரா கமலிடமே கேட்டிருக்கலாம். அப்போது ஏன் கேட்கவில்லை, இந்த வாரம் கன்டென்ட் வேண்டும் என்பதற்காகத்தான் விசித்ரா அப்போது கேட்காமல் இப்போது கேட்டு வருகிறார்.

விசித்ரா டெண்டுல்கர் அளவிற்கு சூப்பராக கேம் விளையாடுகிறார். நான் மாயா விசித்ரா, கூல் சுரேஷ் ஃபேன். மாயா வில்லாதி வில்லன் என்ற கேப்டன். எனக்கு ஜோவிகா மேல ரொம்ப கோவமா வருது. கண்டன்டுக்காக எதுக்கு அர்ச்சனா கிட்ட தேவையில்லாம பேசணும். ஜோவிகா பேச்சுவார்த்தையை ரொம்ப வளர்க்காமல் இருக்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் எல்லோருமே அடிச்சிட்டு தான் இருக்காங்க, அது பார்க்கும்போது சிரிப்பு தான் வருகிறது என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 314

    0

    0