பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார். தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்த மஞ்சுளா விஜயகுமாரின் மகள் ஆவார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதை அடுத்து திரைப்படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. பின்னர் திருமணம் குழந்தைகள் என செட்டில் ஆன வனிதாவுக்கு திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இதனிடையே தனது மகள்களுடன் தனிமையில் வசித்து வந்தார்.
இதற்கிடையில் தனது தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சனையால் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது .
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு பீட்டர் பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்டார். 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு 2005 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
அதன் பிறகு ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர் குடிபோதைக்கு அடிமையானவர் எனக்கூறி அவரையும் விவாகரத்து செய்தார்.
இதையும் படியுங்கள்: இந்தா புடி…. விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர் – டொனால்டு டிரம்ப் பதிவு உலக அளவில் ரெண்டிங்!
பின்னர் பீட்டர் பால் மரணம் அடைந்து விட்டார். வனிதா விஜயகுமாருக்கு விஜய் ஸ்ரீ ஹரி ,ஜோவிகா, ஜெயந்திக்கா என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் இரண்டு மகள்கள் அவருடன் தான் வளர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை வனிதா விஜயகுமார் ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளார் . பிரிந்த காதலர்கள் மீண்டும் சேர்ந்துள்ளதால் இனி என்ன என்னவெல்லாம் நடக்க போகுதோ என நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள்.