‘ராபர்ட் என்ன என் புருஷனா இல்லை பாய் பிரென்ட்டா’.. பல உண்மைகளை உடைத்த வனிதா விஜயகுமார்..!
Author: Vignesh17 October 2022, 12:00 pm
நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். ‘நான் இந்த வீட்டுக்கு போறதுக்கு காரணமே வேற’ என சொல்லி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த அவர் முதல் வாரத்திலேயே ரச்சிதாவிடம் மறைமுகமாக ப்ரொபோஸ் செய்து இருக்கிறார்.
நான் சிங்கிள் தான் என அவர் அழுத்தமாக கூறி, வீட்டை விட்டு வெளியில் போனாலும் ரச்சிதாவுடன் நட்பு தொடர விரும்புவதாக கூறினார்.
கலாய்த்த வனிதா
இந்நிலையில் ராபர்ட் உடன் இதற்கு முன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் வனிதா தற்போது ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் “ராபர்ட் என்ன என் புருஷனா இல்லை பாய் பிரென்ட்டா. நானே பப்ளிசிட்டிகாக அவனை யூஸ் செய்தேன்.”
“2007ல் அவன் யாரையோ கல்யாணம் பண்ணனாம். அது யார் என எனக்கு தெரியவில்லை. பல கல்யாணம் நடந்திருக்கு. அவன் மனைவி மற்றும் குழந்தை எங்கே என தெரியவில்லை. தற்போது சிங்கிள் என இமேஜ் உருவாக்கி கொண்டிருக்கிறார் அவர்” என வனிதா கூறி இருக்கிறார்.