நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான நடிகை வனிதா விஜயகுமார், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.
அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வனிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்டார்.
அந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனால் பாதிலேயே வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றார். அப்படியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகும் திருமணம் உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்தார் வனிதா. பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிடுவது, திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியானார்.
சமீபத்தில் நடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்று பல விமர்சனங்களை பெற்று வெளியேறினார். தற்போது, சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஜோவிகாவின் போட்டோஷூட் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இந்தநிலையில், நடிகை வனிதா விஜயகுமார் Youtube மட்டுமின்றி வேறொரு பிசினஸையும் செய்து வருகிறாராம். அதாவது, இவருக்கு சொந்தமாக துணிக்கடை ஒன்று உள்ளதாம். VV ஸ்டைலிங் என்ற பெயரில் கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் துணிகள் மட்டுமின்றி மேக்கப் சாதன பொருட்களும் கிடைக்கிறது. இந்த கடையில், விற்கப்படும் அனைத்து ஆடைகளும் வனிதா வடிவமைத்த ஆடைகள் தானாம்.
வனிதா விஜயகுமார் பேஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார். இயக்குனர் பி வாசு இயக்கிய சில திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். தனக்கு சொந்தமான VV ஸ்டைலிங் கடை மூலம் நடிகை வனிதா விஜயகுமார் பல லட்சம் வருமானம் சம்பாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
This website uses cookies.