உடல் எடையை குறைக்க கஷ்டப்படவே வேண்டாம்.. வனிதா விஜயகுமாரின் ஈஸி டிப்ஸ்..!

Author: Vignesh
1 July 2023, 1:30 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha - updatenews360

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார்.

இந்நிலையில், தற்போது தானுண்டு தன் வேலை உண்டு என்று வனிதா அவரது வேலையில் பிஸியாக இருந்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், பங்கேற்பது சீரியல்களில் சிறப்பு வேடம் படங்களில் பிஸியாகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே, உடல் எடை குறைக்க முடிவு செய்ததும் வெள்ளை உணவுகளான அரிசி, சர்க்கரை, பால், தயிர் போன்றவற்றை சுத்தமாக நிறுத்தி விட்டாராம். மேலும், வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுமாம்.

vanitha-updatenews360

உடலில் இருக்கும் கொழுப்பு தொப்பையை குறைக்க வெந்நீரில் தேன் எலுமிச்சை சாறு சேர்த்து வனிதா குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளாராம். முன்று வேலை உணவை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஆறு வேலை சாப்பிடுவாராம். தானிய வகைகளான பிரவுன் ரைஸ், கம்பு, குதிரைவாலி, ராகி போன்ற உணவுகளை இரவில் எடுத்துக் கொள்வாராம். இவ்வாறாக தான் வனிதா விஜயகுமார் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளாராம்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி