சம்பளத்துடன் HoneyMoon.. எந்த Lovers-க்கும் இது மாதிரி கிடைக்காது.. கொளுத்திப்போட்ட வனிதா..!
Author: Vignesh22 December 2023, 10:56 am
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்றார். அதன் பிறகு அவருக்கு மீடியாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததோடு, சீசனுக்கு சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்தும் வருகிறார். இந்த சீசனில் அவருடைய மகள் ஜோவிகா கலந்து கொண்டார் என்பதால் ஓவர் ஆர்வம் காட்டி வந்தார்.
ஆரம்பத்தில், அவருடைய மகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. போக போக ஜோதிகா பிக்பாஸ் வீட்டில் சண்டை போடுவது, சாப்பிடுவது, தூங்குவது, கீழே விழுவது என போர் அடிக்கும் வேலைகளை தான் செய்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்கள் தன்னை தாக்கி விட்டதாக வனிதா மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், சரவண விக்ரம் அது எல்லாம் சகித்துக் கொண்டு டைட்டிலுக்காக போராடுவதாக வனிதா சொல்லிக் கொண்டு வருகிறார்.
இந்த பிக் பாஸ் சீசனில் மணி மற்றும் ரவீனா இருவரும் சம்பளத்துடன் வீட்டிற்குள் ஹனிமூன் கொண்டாடி வருவதாகவும், வனிதா தெரிவித்திருக்கிறார். யாருக்கும் இது மாதிரி வாய்ப்புகள் கிடைக்காது. பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் ரொம்ப ஜாலியாக இருக்கிறார்கள். கல்யாணத்திற்கு முன்பே ஹனிமூன் கொண்டாடும் வாய்ப்பு இவர்களுக்கு தான் கிடைக்கிறது என்று கலாய்த்து வருகிறார். உண்மையிலேயே, ரவீனா வீட்டை விட்டு வெளியேறிவிட்டால் மணி தன்னுடைய கேமை நன்றாக விளையாடுவார் என்பது பிக் பாஸ் பார்வையாளரின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.