அர்னவ் நீ வேஸ்ட்டு டா… நானா இருந்தா பளார்னு விட்டுருப்பேன்.. கிழித்தெடுத்த வனிதா!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2024, 11:39 am
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி வாரம் கூட கூட, விறுவிறுப்பு எகிறி வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தற்போது பெண்கள் அணியே வலுவாக உள்ளனர்.
18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் 2 ஆண் போட்டியாளர்களான ரவீந்தர், அர்னவ் வெளியேறியுள்ளனர். மீதமுள்ள 16 பேரில் இந்த வாரம் வெளியறே போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்த நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ஃபன் அன்லிமிடட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இதில் கடந்த வாரம் ரவீந்தரை வைத்து ஷோ நடத்தினர். இந்த வாரம் அர்னவை வைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சீரியல் நடிகர் சபரி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிக் பாஸ் 3யில் பங்கேற்ற வனிதா அர்னவை லெஃப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
இது குறித்து ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அர்னவ் நீ வேஸ்ட்டு, வெளியில் வந்து பேசியதை உள்ளே பேசியிருக்கணும். வீட்டுக்குள்ள என்ன பண்ண, பளாறுனு ஒன்ணு உட்ருப்பேன் என வனிதா காட்டமாக பேசினார்.