சின்ன வயசுல என்ன பத்தி விஜய் சொன்ன அந்த வார்த்தை… சீக்ரெட்டை உடைத்த வனிதா..!

Author: Vignesh
24 February 2023, 6:15 pm

வனிதா பற்றி நாம் அனைவருக்குமே தெரிந்ததே. சர்ச்சைக்கு பெயர் போன வனிதா, ஆரம்பத்தில் இருந்தே தனது தந்தையுடனும் தாயுடனும் மோதல் போக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.

3 திருமணங்கள் செய்த வனிதா அனைவருடனும் வாழப் பிடிக்காமல் விவாகரத்து செய்து விட்டார்.

vanitha_updatenews360

நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார் அவர். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்றபோது, குழந்தை பருவத்தில் விஜய் தன்னை பற்றி குறிப்பிட்டதை சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார்.

vanitha - updatenews360

அதாவது வனிதா 8-வது படிக்கும் போது ஒரு படத்தில் நடிக்க ஷூட்டிங் சென்றதாகவும், அங்கு வந்த விஜய் தன்னை பார்த்து விட்டு, நீ இங்க என்ன பண்ற? எனக் கேட்டதாகவும், உடனே தான் ஷாக் ஆகி, பயந்து போய் எழுந்ததாகவும், அருகில் இருந்தவர்கள் ஷூட்டிங் வந்திருக்கிறார் என சொன்னதும், அடப்பாவிகளா சின்ன பிள்ளைய எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? என திட்டியதாக வனிதா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனக்கு அப்போது முடி அதிகம் இருந்ததால், அதை சுட்டிக்காட்டி தன்னை பாராட்டியதாகவும், ஆனால் அன்று இருந்த விஜய் தற்போது பல ரசிகர்களின் தளபதியாகிவிட்டார் என தெரிவித்துள்ளார். இருந்தாலும் குழந்தை பருவத்தில் அவர் தன்னை கலாய்த்ததை மறக்கவே முடியாது, என வெளிப்படையாக வனிதா தெரிவித்துள்ளார்.

  • nazriya nazim fahadh open talk about why her absent in social media காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!