வாய்ப்பு கேட்டா.. கட்டிப்புடிச்சு டபால்னு கிஸ் பண்ணிட்டாரு.. 69 வயது நடிகர் குறித்து வனிதா பளிச்..!

Author: Vignesh
16 January 2024, 6:15 pm

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் சகோதரியுமான நடிகை வனிதா விஜயகுமார், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வனிதாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் பிக்பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக அவர் கலந்துகொண்டார்.

vanitha_updatenews360

அந்த சீசனில் வனிதா விஜயகுமாரின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகின. இதனால் பாதிலேயே வெளியேற்றப்பட்ட அவர், மீண்டும் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றார். அப்படியும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

பிக்பாஸ் சீசன் முடிந்த பிறகும் திருமணம் உள்ளிட்ட சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து லைம் லைட்டில் இருந்தார் வனிதா. பின்னர் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோ வெளியிடுவது, திரைப்படங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியானார்.

vanitha

இந்த நிலையில், இந்த பிக்பாஸ் 7 வது சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கெடுத்து அவருக்கு ஆதரவாக பிக்பாஸ் விமர்சனம் என்ற பெயரில் யூடியூப் சேனலில் பேசி வந்தார்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் நடிகர் கமலஹாசன் குறித்து வனிதா பேசியபோது, அதில் அவர் என் பிறந்தநாளைக்கு எனக்கு ஒரு பரிசு வேணும்னு கமல் சாரிடம் நான் கேட்டேன். உடனே அவர் என்னை கட்டிப்பிடித்து விட்டார்.

vanitha_updatenews360

இதெல்லாம் எனக்கு வேண்டாம் சார், இன்னொரு பரிசு தான் வேணும்னு சொன்னேன். உடனே, கன்னத்தில் டபால்னு கிஸ் பண்ணிட்டாரு எனக்கு இதெல்லாம் வேணாம் சார் எனக்கு உங்க கூட நடிக்க வாய்ப்பு வேண்டும் என்று சொன்னேன். கண்டிப்பா தரேன்னு சொன்னாரு, ஆனால், இதுவரை கமல் வாய்ப்பே கொடுக்கல.. அவர் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு அல்வா தான் கொடுக்கிறார் என்று வனிதா பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 519

    0

    0