ஏய்…. மணிமேகலை நீ பண்றது சரியில்ல – எச்சரித்த வனிதா!

Author:
24 September 2024, 9:35 am

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆங்கர் ஆக பணியை செய்து வந்த VJ மணிமேகலைக்கும் அந்த நிகழ்ச்சியின் கோமாளியாக இருந்து வந்த பிரியங்காவுக்கும் இடையே கடுமையான சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரியங்கா மணிமேகலையின் வேலையில் குறுக்கிட்டு அவரை தொகுப்பாளினி பணியை செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறி மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்.

vj manimegalai

இந்த விவகாரத்தை அடுத்து பிரியங்காவின் ஆடியோ இணையத்தில் வெளியாகி அவரின் மோசமான முகத்தை கிழித்து உறித்து காட்டியது. இதை அடுத்து பலரும் பிரியங்காவை திட்டியதோடு மணிமேகலைக்கு பெருவாரியான சப்போர்ட் அதிகரித்தது. இந்த விஷயம் நாளுக்கு நாள் அதிகரித்து விவாதம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

இதனை தவிர்த்து பிரியங்காவுக்கு நெருக்கமானவர்கள் பலரும் அவரின் மீது தப்பு இல்லை என்றும் மணிமேகலைக்கு பலரும் சப்போர்ட் செய்து ஆதரவாக இருந்து வருகிறேன் என்ற பெயரில் ஒவ்வொரு கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் இந்த சண்டை விவகாரம் குறித்து பேட்டி கூறி இருப்பது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

vj priyanka

அதாவது பிரியங்கா என்னிடம் நடந்த விஷயத்தை கூறி ரொம்பவே கதறி அழுதாங்க. அவங்கள பத்தி நிறைய பேர் திட்றாங்க அவங்களோட விவாகரத்து, பிரியங்காவின் முன்னாள் கணவர் பற்றியெல்லாம் பேசி அந்த பொண்ண ரொம்ப மோசமா திட்டுறாங்க.ஒரு பொண்ணோட வலி இன்னொரு பொண்ணுக்கு தெரியலன்னா அவ பொண்ணே கிடையாது.

ஏன் அந்த மாதிரி பேசணும்? அது மட்டும் இல்லாமல் பிரியங்காவை குறித்து மோசமாக விமர்சிக்கப்பட்டு வெளிவரும் வீடியோக்களை பார்த்து ரசித்து மணிமேகலை வீடியோ வெளியிடுவது சரி இல்லை. மணி நீ ஒரு வளர்ந்து வர பொண்ணு இதெல்லாம் நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல. உனக்கு நல்ல புருஷன் இருக்காரு அதனால உன் வாழ்க்கை நல்லா இருக்கு.

vanitha

இதையும் படியுங்கள்:தியேட்டர் பிரிண்ட் வச்சே திரிஷாவுக்கு லிப்லாக் அடிச்சோம்… “மட்ட” வீடியோ பார்த்து மனம் குளிர்ந்த ரசிகர்கள்!

ஆனால், அடுத்தவங்களோட வலியிலும் வேதனையும் அவங்கள குத்தி சிரித்து அதில் சந்தோஷப்படுவது நல்லதே இல்லை என வனிதா மணிமேகலையை எச்சரித்திருக்கிறார். பிரியங்காவின் கேரக்டரையும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் இந்த சண்டை விவகாரத்தில் பேசும் போது அதை நீ என்கரேஜ் பண்ணவோ அதை நினைத்து சந்தோஷப்படவோ கூடாது அது மிகப்பெரிய தப்பு என வனிதா கூறி இருக்கிறார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ