குட்டி பாப்பாவா இருக்கும் போது… நடிகை வனிதாவின் குழந்தை பருவ புகைப்படம்!

Author: Rajesh
20 January 2024, 12:28 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனிடையே அவரது மகள் ஜோதிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலம் ஆனார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகை வனிதாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சிவாஜி கனெக்ஷன் வனிதாவின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரை தூக்கி வைத்திருக்கும் போட்டோ வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் வனிதா குழந்தை பருவத்தில் அவரின் அம்மாவுடன் இருக்கும் கியூட்டான போட்டோ தற்போது வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் குட்டி பாப்பாவா இருக்கும்போது பவ்யமாக இருந்துள்ள வனிதா இப்போ பஜாரி மாதிரி ஆகிட்டாங்க என கிண்டல் அடித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 429

    0

    0