நடிகை வனிதா பிக் பாஸுக்கு பிறகு தனியாக youtube சேனல் தொடங்கி நடத்தி வருகிறார். அவர் சமையல், மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி வீடியோ வெளியிட்டு வருகிறார் அவர். அவற்றுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் சீரியல்கள், படங்கள் என நடிகையாகவும் தொடர்ந்த பிசியாக இருந்து வருகிறார் அவர். இந்நிலையில் தற்போது ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்கி இருப்பதாக கூறி புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார் வனிதா.
அதில் அவர் ஷார்ட் ஆன முடி, கோட் அணிந்து கார்ப்பரேட் பெண் போல மாறி இருக்கிறார். வனிதாவா இது என போட்டோ பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார் அவர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.