கோலாகலமாக நடந்தேறிய சரத்குமார் இல்ல திருமணம்; வாழ்த்திய தலைவர்கள்

Author: Sudha
4 July 2024, 10:27 am

தமிழில் வித்தியாசமான நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார். போடா போடி திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.நிறைய திரைப்படங்களில் வில்லியாகவும் அசத்தியிருந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

இவரும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரும் காதலித்து வந்தனர்.இவர்களுடைய நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

நேற்று நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.


வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னதாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்
பரபரப்பான வேலை காரணமாக தனிப்பட்ட முறையில் அழைப்பிதழை தவறவிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பத்திரிக்கை குறிப்பை திருமண அழைப்பிதழாக கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்வு முடிந்த மறுநாள் வரலக்ஷ்மி மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்புப் படங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் .
ஆதலால் இன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக, வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவின் திருமணத்திற்கு முந்தைய விழாவின் படங்கள் மற்றும் காணொளி வைரலானது. அதில் சரத்குமார், ராதிகா, ராடன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நடமாடும் வீடியோ அனைவரையும் கவர்ந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 206

    0

    0