நடிகை வரலட்சுமி சரத்குமார்:
வாரிசு நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஹீரோயின் ஆகவும் வில்லி ரோல்களிலும் நடித்து அசத்தியவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
போடா போடி திரைப்படத்தின் மூலமாக நடிப்பு பயணத்தை தொடங்கியவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் வரலட்சுமி மூன்று மெகா ஹிட் படத்தை தவிர விட்டதாக சமீபத்தை பேசி ஒன்றில் கூறியிருக்கிறார் .
மூன்று மெகா ஹிட் படம்:
சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் மற்றும் காதல், சரோஜா போன்ற மூன்று சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பு வந்தபோது என்னுடைய அப்பா அந்த படங்களில் நடிக்க வேண்டாம் என மறுத்தார். திரைப்படங்களிலே நடிக்கவிடாமல் இருந்ததால் அந்த மூன்று பட வாய்ப்புகளை தவற விட்டுவிட்டேன்.
இல்லையென்றால் நான் இன்னும் உயரத்திற்கு சென்றிருப்பேன் என வரலட்சுமி கூறியிருக்கிறார் இந்த கேள்விப்பட்ட ரசிகர்கள் அந்த மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்… ஒரு வேலை அதில் நீங்கள் நடித்திருந்தால் அப்போதே உங்கள் நடிப்பு திறமை வெளிப்படுத்தி இருக்கும் என வருத்தப்படுவதோடு சரத்குமாரை திட்டி வருகிறார்கள்.