தைரியம் இருந்தா நேர்ல வாடா.. சீண்டிய நபரை வெளுத்து வாங்கிய வரலட்சுமி சரத்குமார்..!

Author: Vignesh
8 March 2024, 11:42 am

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

varalakshmi

இதன் பிறகு விஷால் உடன் காதல் இருந்ததாக தகவல் வெளியாகி அதுவும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெளியான ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நெகட்டிவ் கேரக்டரை ஏற்று நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்த அங்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதனால் அவர் ஹைதராபாத்திலே செட்டில் ஆகிவிட்டார்.

Varalaxmi Sarathkumar

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே, கடந்த 14 ஆண்டுகள் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் பெற்றோர்கள் சம்மதத்துடன் மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். தற்போது, இவர்களின் புகைப்படம் வைரலானது.

Varalaxmi Sarathkumar

இந்நிலையில், இது குறித்து பேசிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சரத்குமார் எல்லாவற்றையும் துணிந்து நின்று எதிர்த்து போராடக் கூடியவர். இவரது குணம் தான் வரலட்சுமிக்கும். இவரை நாம் ஆண் என்று அழைக்கலாம். இரவு 12 மணிக்கு தான் வரலட்சுமி வீட்டுக்கு வருவார். அப்படி வரும்போது யாராவது சீண்டினால், அவ்வளவுதான் நடுரோடு என்று கூட பார்க்காமல் சண்டையிடுவார்.

varalakshmi - updatenews360

மிகவும் தைரியமான பெண் இவர். வரலட்சுமிக்கு திருமணம் என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அவருக்கு வயது 38 திருமணம் செய்து கொள்ள போகும் நிக்கோலாயிற்கு வயது 41 அவரது அப்பா நடத்தி வந்த தொழிலை தான் இவர் தற்போது செய்து வருகிறார். இவருக்கும், கவிதா என்ற கலிபோர்னியா நாட்டு அழகிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இவருக்கு 15 வயதில் மகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இவருக்கு இரண்டாம் திருமணம் ஆகும். சரத்குமாருக்கு ஏற்ற மாப்பிள்ளை தான் என்றும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Varalaxmi Sarathkumar

இதனைப் பார்த்து ரசிகர்கள் என்னடா பதினோரு வருஷம் ஆச்சுன்னு சொல்றீங்க கல்யாணம் ஆகி பொண்ணுக்கு வயசு 15 ன்னு சொல்றீங்க எல்லா கணக்குமே இங்கு இடிக்குதே என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் கோபமாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனக்கு தப்பாகவும் மிகவும் மோசமாக வந்த கமெண்ட்களை போட்ட நபர்களுக்கு வரலட்சுமி பதிலடி தந்துள்ளார்.

varalakshmi sarathkumar-updatenews360

அதில், தப்பான கமெண்ட் செய்பவர்களை பார்த்து ஒன்றே ஒன்றுதான் கேட்க ஆசைப்படுகிறேன். எங்களிடம் இப்படி பேசுவது போல உங்களுடைய அம்மா மற்றம் தங்கைகளிடமும் அப்படி பேசுவீர்களா? ஒருவரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அவர்களை அன்பாலோ செய்து விடுங்கள். ஏன் தப்பான கமெண்ட் மூலம் கஷ்டப்படுத்த வேண்டும். உண்மையான கமெண்ட் அடிக்க வேண்டும் என்றால், அப்ப நேர்ல வா என்று வரலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 201

    0

    1