திரைப்படத்தை மிஞ்சும் ரொமான்ஸ்… கனவு தேசத்தில் ஹனிமூன் கொண்டாடிய வரலக்ஷ்மி சரத்குமார்..!

Author: Vignesh
6 July 2024, 10:42 am

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

Varalaxmi Sarathkumar

வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஐந்து நாட்களாக திருமண கொண்டாட்டத்தில் இருந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது, கணவருடன் ஹனிமூன் சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை அவர் இணையதளத்தில் வெளியிட்டு, புயலுக்கு பின் அமைதி என குறிப்பிட்டு இருக்கிறார்.

Varalaxmi Sarathkumar
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 315

    0

    0