’90ஸ்’ல எனக்கு போட்டியா ஒரு நடிகர் உருவானாரு’ விஜய் பேசிய முழு வீடியோ இணையத்தில் வைரல்..!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2022, 1:21 pm
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு இருக்கு ரசிகர்கள் சப்போர்ட் பற்றி அனைவரும் அறிந்ததே. வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி இவரது நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. வாரிசு திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியாக ஏற்கனவே பிரச்சனை தொடங்கியது.

இதற்கு முன்னரும் சில விஜய் படங்களுக்கு பிரச்சனைகள் எழுந்தது குறித்தும் அனைவரும் அறிந்ததே. அப்படி படத்திற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் இசை வெளியீட்டு விழாவில் விஜய் அதற்கு தக்க பதில் கூறுவது போல பேசிவிடுவார். இதனாலேயே விஜய் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில், வாரிசு படத்துக்கும் பல பிரச்சனைகள் சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ரஞ்சிதமே பாடல் பாணியில் முத்தமிட்டபடி பேச தொடங்கிய விஜய் கூறியதாவது, “இயக்குனர் வம்சி கதையா கேட்டாலே யாராக இருந்தாலும் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வார்கள். இந்த படம் என்னுடைய நண்பன் நண்பிகள் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படம். பாடலாசிரியர் விவேக்குக்குள் ஒரு இயக்குனர் இருக்கிறார் அதனை நீங்கள் இந்த படத்தில் பார்ப்பீர்கள்.
இசையமைப்பாளர் தமன் புல்லாங்குழல் வைத்து கூட ட்ரம்ஸ் வாசிப்பார் ஏனெற்றால அப்படித்தான் இசை இருந்தது. வில்லன் என கேட்டால் பல பேரை கூறுவார்கள், ஆனால் செல்லம்னு சொன்னாலே எல்லோருடைய மனதிற்கும் வருவது பிரகாஷ்ராஜ் தான். கில்லி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் நடித்திருக்கிறேன். குஷ்பு மேடமை பார்த்தால் நண்பர்களுடன் சேர்ந்து சின்னத்தம்பி படத்தில் பார்த்த ஞாபகம் தான் வருகிறது.
ரத்தத்திற்கு மட்டும்தான் இந்த ஏழை பணக்காரன், உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி அதோட ரொம்ப முக்கியமா என்ன மதம்! என்று தெரியாது. மனிதர்கள் தான் எல்லாவற்றிலும் பிரிவினையை பார்க்கிறோம். ரத்தமிடம் இருந்து அந்த தன்மையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் நான் ரசிகர்களின் மூலம் ரத்ததானத்தை ஊக்குவிக்கிறேன்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
பிரச்சனை வரும்போதெல்லாம் நாம் சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். விமர்சனமும் எதிர்ப்பும் தான் முன்னேறி ஓட வைக்கும். எனக்கும் போட்டியா 90ஸ்களில் ஒரு நடிகர் உருவானார். அவர் வெற்றியாளராக இருந்ததினால்தான் நான் அவருடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறேன் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறிய தளபதி. Compete with Yourself, Be your own competition!” என்று ரசிகர்களை ஊக்கு விக்கும் வகையில் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசியிருந்தார். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய முழு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.