வெளியான ‘வாரிசு’ கிளைமாக்ஸ் சீக்ரெட் : ஆனா, இது அந்த படத்தோட கிளைமாக்ஸ் ஆச்சே..?

Author: Vignesh
27 December 2022, 11:06 am

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது, அதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் எப்படி அப்பா, மகள் செண்டிமெண்ட் இருந்ததோ அதே போல் விஜயின் வாரிசு படத்தின் கிளைமாக்ஸில் அப்பா சரத்குமாருக்கும், மகன் விஜய்க்குமான செண்டிமெண்ட் காட்சி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

viswasam - updatenews360

இந்த கிளைமாக்ஸ் காட்சி தான் மக்கள் மனதில் மிகப்பெரிய வெற்றியை நிர்ணயிக்கபோகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 704

    7

    10