அந்த படத்துல அந்த சீன் வைக்கல… பிரபல நடிகையின் காட்சியை வெட்டித்தூக்கிய இயக்குனர்..!
Author: Vignesh18 January 2023, 11:30 am
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வாரிசு படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
வாரிசு படம் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் தற்போது விழாக்கோலம் போல ஜொலித்து வருகிறது. ஒரு சிலர் கலவையான விமர்சனமும் வாரிசு படத்திற்காக கூறி வந்தாலும், விஜய்யின் பெற்றோர்களை வைத்தும் சிலர் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், படத்தின் ஒட்டுமொத்த காட்சி 4 மணிநேரத்திற்கு மேல் என்றும் அதில் 1.17 மணி நேர காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், படத்தின் எடிட்டர் மற்றும் இயக்குனர் வம்சி பேட்டிகளில் தெரிவித்து வந்தனர்.
ஆனால் வாரிசு படத்தில் நடிகை குஷ்பூவின் காட்சி 17 நிமிடங்கள் இருந்ததாகவும் அவர் மிகவும் சிறப்பாக நடித்தார் என்றும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.
சில தேவைகளுக்காக அவரின் காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் வம்சி ஓப்பனாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.