சீரியல் பைத்தியமா நீங்க?… ‘வாரிசு’ தமிழ்ல டப் பண்ண இந்தி மெகா சீரியல்.. முதல் நாளே கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை..!
Author: Vignesh11 January 2023, 4:26 pm
இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வாரிசு படம் வாரிசு வெளியானது.

இந்நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகள் வெளியான வாரிசு படத்தின் பிரீமியர் ஷோ நேற்று இரவு 8.30 மணிக்கு சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. பல நட்சத்திரங்களும் பத்திரிக்கையாளர்களும் ஷோவில் கலந்து கொண்டு பார்த்தனர்.
அதில் பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் கலந்து கொண்டார். ஏற்கனவே விஜய் வாரிசு படத்திற்காக ப்ளூ சட்டை மாறனுக்கு 1 கோடி ரூபாய் நல்ல விமர்சனத்திற்காக கொடுத்துள்ளார் என்ற செய்தி பொதுவாக பரவியது.
இதனால் வாரிசு படத்தினை ப்ளூ சட்டை மாறன் புகழ்ந்து தள்ளுவார் என்று பொதுவாக எதிர்ப்பார்த்தனர். ஆனால் தற்போது மாறன் வாரிசு படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இந்த வாரிசு மெகா சீரியல் சொல்வதை விட இந்தி மெகா சீரியல் என்று சொல்லலாம் என்று படுமோசமான விமர்சனத்தை ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.