அப்பாடா.. நான்கூட புதுசுன்னு நெனச்சி பயந்துட்டங்க.. ‘வாரிசு’ படத்தின் ‘ட்ரைலரை’ கலாய்த்த `ப்ளூ சட்டை’ மாறன்..!

Author: Vignesh
5 January 2023, 11:26 am

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார் தமன். கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, வாரிசு படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கப் போகிறது..? நல்ல படமாக இருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் வேண்டி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், வாரிசு படம் குடும்ப ரீதியான பாடமாக இருப்பது போன்று அமைந்துள்ளது. விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

காமெடி, செண்டிமெண்ட், ஆக்‌ஷன் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரைலராக இது இருந்தாலும், இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர்.

Varisu Trailer - Updatenews360

இப்படத்தின் இயக்குனர் தமிழ் படங்களின் சாயலில் தான் வாரிசு படத்தை எடுத்திருக்கிறேன் என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் சிலர் வாரிசு படம் மகேஷ் பாபு படங்களின் ரீமேக் போன்று இருக்கிறது என ட்ரைலர் பார்த்த பின் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து வாரிசு திரைப்படம் ட்ரைலர் மெகா சீரியல் போல இருக்கிறது. இதற்கு முன்பு தமிழ் படங்களில் வந்த கதையே தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல் ட்ரோல் செய்கின்றனர் .

இதனிடையே, அப்பாடா.. நான்கூட புதுசுன்னு நெனச்சி பயந்துட்டங்க.. என ‘வாரிசு’ படத்தின் ‘ட்ரைலரை’ `ப்ளூ சட்டை’ மாறன் கலாய்த்து பதிவிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 583

    3

    0