‘இங்க விஜய்தான் நம்பர் 1… அதிக தியேட்டர்கள் வேணும்’ ; அடம்பிடிக்கும் வாரிசு பட தயாரிப்பாளர்.. உதயநிதியை சந்திக்க திட்டம்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
16 December 2022, 8:42 am

பொங்கல் பண்டிகைக்கு துணிவுடன் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அஜித்தின் அடுத்த படமான ‘துணிவு’ 2023 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படத்துடன் மோதுவதால், இரண்டு படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், இந்தப் பொங்கல் பண்டிகை போட்டியான பண்டிகையாகும்.

வினோத் இயக்கத்தில், ‘துணிவு’ திரைப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் மற்றும் திரைப்படத்தில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விஜய்யின் 66-வது படமான வாரிசு படம், 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அந்தப் படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘வாரிசு’ மற்றும் துணிவு படங்களின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி அடுத்தடுத்து ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளன.

Varisu's Thee Thalapathy - updatenews360

இதனிடையே, இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. ‘துணிவு’ படத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் ‘வாரிசு’ படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து கொண்டே வருகிறது.

இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு மட்டுமேல்ல, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கும் இருந்து கொண்டுதான் வருகிறது.

இந்த நிலையில், துணிவு படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதாகவும், வாரிசு படத்துக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் அரசல்புரசலாக வெளியான நிலையில், முதன்முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பிளார் தில் ராஜூ.

இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் துணிவு படத்துக்கு நிகரான தியேட்டர் வாரிசு படத்துக்கு கிடைக்கவில்லை. பல்வேறு புள்ளிவிவரங்களின்படி விஜய் தமிழகத்தின் நம்பர் 1 ஸ்டாராக இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். ஆனால், அஜித்தின் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம், துணிவு படத்திற்கு அதிக தியேட்டர்களை லாக் செய்துவிட்டு, வாரிசுக்கு போதுமான தியேட்டர்களை கொடுக்க மறுக்கின்றனர். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும், என்று கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 542

    1

    1