விஜய் நடிப்பில் பொங்கலன்று வெளிவர உள்ள வாரிசு படத்தில் விஜய் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.
விஜய் தனது படங்களில் சொந்தக்குரலில் பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அனைத்து படத்திலும் பாடல் பாடி வருகிறார்.
விஜய் கடைசியாக பாடிய 4 படங்களின் பாடல்கள் அத்தனையும் வெகுவாக ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.
விஜய் ரத்தத்தில் ஊறிய இசை
தனது முதல் படமான தேவா படத்திலிருந்து நடிகர் விஜய் பாடி வருகிறார். அவரது தாயார் சங்கிதா பாடகி என்பதாலோ என்னவோ இயற்கையாகவே அவரது ரத்தத்தில் இசை ஊறிவிட்டது. தொடர்ந்து பல படங்களில் விஜய் பாடி வருகிறார்.
பீஸ்ட் படத்தில் அவர் பாடிய ஜாலியோ ஜிம்கானா ஹிட் அடித்தது. தற்போது அவர் நடித்து பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு படத்திலும் பாடல் பாடியுள்ளார். அது இன்று வெளியானது.
கடைசியாக விஜய் பாடிய 4 படங்கள்
விஜய் வாரிசு படத்துக்கு முந்தி கடைசியாக பாடிய 4 படங்களின் பாடல்களுக்கும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. விஜய் தனது முந்தைய படமான பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடலை பாடியுள்ளார்.
இந்தப்படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அரபிக்குத்து பாடல் 350 மில்லியனை கடந்து விட்டது. விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடலை அனிருத் எழுதி இசையமைத்திருப்பார். இந்த வீடியோ சாங் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது அதுவும் 7 மாதத்தில்.
ஒரு குட்டி ஸ்டோரி
பீஸ்ட் படத்துக்கு முன் விஜய் நடித்து வெற்றிநடைப்போட்ட மாஸ்டர் படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடியிருக்கிறார். இந்தப்படத்தில் தான் வாத்தி கமிங் சாங் 400 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. அதே படத்தில் வரும் ஒரு குட்டி ஸ்டோரி பாடலை அனிருத்துடன் இணைந்து விஜய் பாடியிருப்பார். இந்தப்பாடல் 111 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
பிகில் வெறித்தனம் பாடல்
அதற்கு முன்னர் வந்த பிகில் படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டது. கால்பந்தாட்டத்தை அடிப்படையாக வைத்து விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்தப்படத்திலும் விஜய் ஒரு பாடல் பாட அது செம்ம ஹிட் அடித்தது. வெறித்தனம் பாடலை 141 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
தெறி படத்தில் பாடல்
பிகில் படத்துக்கு முன் வந்த சர்கார், மெர்சல், பைரவா படங்களில் விஜய் பாடவில்லை. தெறி படத்தில் பாடிய பின் 3 ஆண்டுகள் கழித்து பிகில் படத்தில் பாடினார். தெறி படத்தில் விஜய் பாடிய செல்லா குட்டி பாடல் 37 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. விஜய் கடைசியாக பாடிய நான்கு படங்களில் இந்தப்பட பாடல் தான் குறைவான பார்வையாளர் எனலாம். தற்போது வந்துள்ள வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை சில மணி நேரத்தில் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.