படம் ரிலீஸாகி ஒரு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இத்தனை சக்சஸ் பார்ட்டியா..? வாரிசை பங்கம் செய்த நெட்டிசன்கள்!!

Author: Vignesh
25 January 2023, 6:00 pm

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வம்சி பைடிபல்லி. இவரது இயக்கத்தில் தமிழ் திரையுலகின் டாப் நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் சரத்குமார், யோகிபாபு, பிரபு, எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், பிரகாஷ் ராஜ், ஷியாம், சங்கீதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, விடிவி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார்.

இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்நிலையில், ரிலீஸ் ஆனது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் வாரிசு திரைப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி வெளியான 7 நாட்களில் இப்படம் 210 கோடிக்கு மேல் வசூலித்து இருந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் வாரிசு திரைப்படம், விரைவில் 300 கோடி கிளப்பிலும் இப்படம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து சிம்பிளாக கொண்டாடி உள்ளார். ஐதராபாத்தில் வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இப்படத்தினை வெற்றியை படக்குழுவினர் இதுவரை 7 முறைக்கும் மேல் குடும்பத்துடன் கொண்டாடி பார்ட்டியும் வைத்துள்ளனர்.

varisu - updatenews360

இந்நிலையில், விஜய் சரத்குமார் – ராதிகா வீட்டில் இன்றோடு 15 நாட்களாகிய நிலையில் வாரிசு குடும்பத்துடன் பார்ட்டியை வைத்து கொண்டாடி ஆட்டம் போட்டுள்ளனர்.

இதை நெட்டிசன்கள் பலர் படத்தை பார்த்த எண்ணிக்கையைவிட சக்சஸ் மீட் பார்ட்டி வைத்தது தான் அதிகம் என்று கலாய்த்து மீம்ஸ் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 549

    0

    0